இன்றைக்கு Social Media பற்றிய சில அடிப்படை செய்திகளை தெரிந்துக் கொள்ள போகிறோம்.
Social Media என்றால் என்ன?
Social Media (சமூக ஊடகம்) என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்ல வேண்டும் என்றால்: “உங்கள் கருத்துக்களை படைக்கவும், பகிரவும் Internet மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம், அல்லது ‘மேடை’ என்று கூட சொல்லலாம்.”
Social mediaவுக்கும் Traditional mediaவுக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைய நவீன சமூக ஊடகத்திற்கும், வழக்கமான மரபார்ந்த ஊடகங்களான ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களுக்கான வித்தியாசம் என்னவென்று பார்ப்போம்.
1.User Generated Content – ஒரு சதாரண மனிதனின் செய்தி
பொதுவாக அச்சு ஊடகங்கலானாலும் (Print media – Newspapers), காட்சி ஊடகங்கலானாலும் (Audio-visual media – TV, Radio) சரி, செய்தியை உருவாக்குவது ஒரு நிறுவனமாகவும், அதை பார்ப்பவர், அல்லது படிப்பவர் ஒரு தனி நபராகவும் இருப்பார். அந்த நிறுவனம் என்ன சொல்ல நினைக்கின்றதோ அதைத்தான் நுகர்வோர் அனைவரும் உட்கொள்ள முடியும்.
ஆனால் Social Media எனப்படும் சமூக ஊடகத்தில், பெரும்பாலான் செய்தியை உருவாக்குவதும், பகிருவதும் தனிமனிதராகிய நுகர்வோரே (users)!
அதனாலேயே இது பரவலாக எல்லோராலும் விரும்பப்படுகிற ஒரு ஊடகமாக தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. ஒரு சாமானியனின் குரலை பொதுவெளியில் உரக்கச் சொல்கிற சாதனமாக இருப்பதால், ஒரு தனிமனிதன் தன்னை இந்த சமூகத்தின் அங்கமாக உணருகிறான்.
2. Viral Capability – காட்டுத்தீயாய் செய்திகளை பரப்பும் சாத்தியம்
இரண்டாவது, வேகமாக பரவும் தன்மை (viral capability) இந்த நவீன சமூக ஊடகங்களுக்கு உண்டு. மற்ற mediaக்களைக் காட்டிலும் social mediaவில் ஒரு செய்தி அல்லது படைப்பு, லட்சக்கணக்கானோரை உடனடியாக சென்று அடைந்து விடுகிறது. ஆகவே உங்களுக்கு செய்திகளை பரப்ப ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது.
3. Low Cost Promotional Capability – குறைந்த செலவில் செய்திகளை பரப்பும் சாத்தியம்
மூன்றாவதாக உங்கள் படைப்புக்களை மற்றவர்களிடம் எடுத்து செல்வதற்கு மற்ற எந்த பழைய ஊடகங்களைக் காட்டிலும் இதில் ஆகும் செலவு மிக மிக குறைவு. காட்சி ஊடகங்கள் மற்றும் பண்பலைகள் மூலமாக உங்கள் படைப்பை எடுத்து செல்வதற்கு பல லட்சங்களை செலவழிப்பதற்கு பதிலாக மிக குறைந்த முதலீட்டில் (சில நூறு ரூபாய்களில்) அனைவரையும் சென்று அடைந்து விட எளிமையான வழி இந்த சமூக ஊடகங்கள்.
சமூக ஊடகத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?
சமூக ஊடகங்கள் தனிமனித ஊடகமாக மாறிக்கொண்டிருக்கின்ற வேளையில், அதை பயன்படுத்தி பயனடைவது என்பது மிக அத்தியாவசிய தேவையாக மாறிக்கொண்டு இருக்கிறது. உங்களிடம் பிறருக்கு பயன்ப்படும்படிக்கு உபயோகமான ஒரு தகவலோ செய்தியோ இருக்கிறது என்றால் அதை உலகிற்கு சொல்ல சமூக ஊடகங்களை விட சிறந்த வழி இருக்க முடியாது .
Facebook எனப்படும் முகநூளில் மட்டும் நூற்று தொண்ணூற்று நான்கு கோடி பேர் பயனாளிகளாக இருப்பதாக இந்த முகநூல் நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிற சமூக ஊடக நிறுவனங்களான Twitter, Instagram, LinkedIn, Google Plus எனும் பிற நிறுவனங்கள் வழியாகவும் கோடான கோடி பேர் அன்றாடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மிக எளிமையாகவும், செலவில்லாமலும் கிடைக்கும் ஒரு மேடையை நீங்களும் ஏன் பயன்படுத்தக்கூடாது?
உதாரணத்திற்கு 18 – 25 வரையுள்ள, அதுவும் திருச்சியில் உள்ள இளைஞர்களுக்கான ஒரு செய்தியை, ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவர்கள் மட்டும் பார்க்கும் படியாக செய்ய வேண்டுமென்றால், அது இந்த நவீன சமூக ஊடகங்களில் மட்டுமே சாத்தியம்.
இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளரோடு தினந்தோரும் பேசலாம். உங்கள் எண்ணத்தை வெளியிட வீடியோ, ப்ளாக் (Blog) எழுதுவது, அனிமேஷன் போன்ற எண்ணற்ற வகைகளில் வெளிப்படுத்தலாம்.
நீங்கள் ஒரு தொழில் செய்பவராக இருந்தால், உங்கள் பிராண்டை (Brand) உருவாக்கவும், விளம்பரப்படுத்தவும் (Advertising), இந்த சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பலன் கொடுக்கும்.
தொழில் ரீதியிலான கருத்துக்களை வெளிப்படுத்த மட்டும் அல்ல, தனிமனிதனாக உங்கள் கருத்துக்களை எண்ணங்களை வெளிப்படுத்தவும் இது மிகச் சிறந்த ஊடகம்.
உங்களோடு, ஒத்த கருத்துடையவர்களோடு உரையாடுவதற்கும், உங்கள் கருத்துக்களை கூர்மைபடுத்திக் கொள்வதற்கும், உலகளாவிய அளவில் உங்கள் கருத்துக்களை கொண்டு செல்வதற்குமான மிகச் சிறந்த ஊடகம், இன்றைய நவீன சமூக ஊடகங்கள் தாம்.
அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று வருகிற காலங்களில் கூற இருக்கிறேன். நீங்களும் உங்களுக்கு பயன்படுகிற வகையில் சமூக ஊடகங்களில் கால்பதிப்பதை பற்றி சிந்தியுங்கள்.
உங்களுக்கு இதைப்பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் இந்த commentsல் அதை கேட்கலாம். அல்லது Facebook மூலமாகவும் Facebook Messenger வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
மீண்டும் இந்த Blog மூலம் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுகிறேன்! நன்றி வணக்கம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
உங்கள் social media தமிழன்,
நாச்சி லாசரஸ்